undefined

 ஜூலை 28ம் தேதி சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு! 

 

 இந்தியா முழுவதும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணிணி மூலம்  நடத்தப்பட்டு வருகிறது. இதில் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும். 


அதன்படி நடப்பாண்டுக்கான 2ம் கட்ட சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஜூலை 26 முதல் 28ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூன் 3ம் தேதி  தொடங்கி 26ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு 25000க்கும்  மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்து இருப்பதாகத்  தெரிகிறது. இந்நிலையில்  ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு ஜூலை 26, 27-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என  என்டிஏ-வுக்கு பட்டதாரிகள் கோரிக்கை வைத்தனர். 


அதையேற்று தேர்வுக்கால அட்டவணையில் என்டிஏ தற்போது மாற்றம் செய்துள்ளது. அதன்படி சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுகள் ஜூலை 28ம் தேதி ஒரேகட்டமாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு ஆங்கிலம், இந்தி  மொழிகளில் மட்டுமே நடைபெறும். ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை csirnet.nta.ac.in, nta.ac.in ஆகிய வலைத்தளங்களில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?