ரகசியமாக காதல் திருமணம் செய்துக் கொண்ட மகள்... மகளின் கண்முன்னாலேயே காதலனைக் கொன்ற தந்தை!
கல்லூரியில் படித்து வரும் மகள், காதல் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கல்லூரி விடுதிக்குள் நுழைந்து, மகள் கண் முன்னாலேயே காதலனை துப்பாக்கியால் சுட்டு அதிர வைத்திருக்கிறார் பெண்ணின் தந்தை. பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில், ராகுல் குமார் (25) என்பவர், 2 ம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த தானு பிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டு, இவர்களது பழக்கம் நாளடைவில் காதலில் கலந்தது. அதன் பின்னர் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், தனது மகன் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதைப் பெண்ணின் தந்தையும் அவரது குடும்பத்தினரும் ஒப்புக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. எனவே, எப்படியாவது தனது மருமகனை தீர்த்து கட்ட திட்டம் போட்டு வந்தார் பெண்ணின் தந்தை.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ராகுலும் தானுவும் திருமணம் செய்து கொண்டு ஒரே விடுதி கட்டிடத்தில் வெவ்வேறு தளங்களில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஹூடி அணிந்த ஒரு மர்ம நபர் ராகுலை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். விசாரித்ததில் ராகுலை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பெண்ணின் தந்தை சங்கர் ஜா என்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து தானு கூறுகையில், “என் தந்தை என் கண்களுக்கு முன்பாகவே என் கணவரின் மார்பில் சுட்டதில் என் கணவர் என் மடியில் விழுந்து உயிரை விட்டார். என் முழு குடும்பமும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது“ என கதறி அழுதார். ஏற்கனவே நாங்கள் இருவரும் நீதிமன்றத்தில் என் தந்தையும் என் சகோதரர்களும் என்னையோ அல்லது என் கணவரையோ காயப்படுத்தக்கூடும் என்று மனு அளித்திருந்திருந்தோம்" எனக் கூறியுள்ளார்.
ராகுலை ஜா துப்பாக்கியால் சுட்டதை அறிந்த ராகுலின் நண்பர்களும் மற்ற விடுதி மாணவர்களும் ஜாவை அடித்து உதைத்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து இதுகுறித்து பேசிய போலீசார், "பிஎஸ்சி நர்சிங் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்கு முதலில் தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்ததில் அவருக்கும் சக மாணவிக்கும் காதல் திருமணம் நடந்தது எங்களுக்குத் தெரிய வந்தது. பெண்ணின் தந்தையே சுட்டுக் கொலை செய்துள்ளார். இதனையறிந்த ராகுலின் நண்பர்கள் ஜாவை அடித்து உதைத்துள்ளனர். அவர் இப்போது பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனக் கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!