undefined

கடன் தொல்லை... வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!

 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் உறவினருக்கு வாங்கி கொடுத்த கடனை, அவர் திருப்பி செலுத்தாததால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி பாரதி நகர் கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முத்துராஜ் (36). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் வசிக்கும் தனது உறவுக்கார பெண் முத்துமாரி என்பவருக்கு ஆன்லைனில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அந்த கடனை அவர் முறையாக செலுத்தவில்லையாம். இதனால், கடன் கொடுத்தவர்கள் முத்துராஜூக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அவர் பாரதி நகர் அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் குருணை மருந்தை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்து அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.  இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் கோயில்பிள்ளை வழக்குப் பதிந்தார். இன்ஸ்பெக்டர்  தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?