டெல்லி கார் வெடிப்யில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

 

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே ஏற்பட்ட துயரகரமான கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் நின்றிருந்த ஒரு கார் திடீரென வெடித்து சிதறியதில் பல வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன.

இந்த வெடிப்பில் 12 பேர் உயிரிழந்ததுடன், 24 பேர் பலத்த மற்றும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வெடிப்பின் காரணம் குறித்து தேசிய பாதுகாப்பு அமைப்புகள் (NIA) மற்றும் டெல்லி போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா அறிவித்ததாவது: “வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். நிரந்தர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.

மேலும், காயமடைந்தவர்கள் சிறந்த சிகிச்சை பெற மருத்துவத் துறைக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் முழு விவரங்களும் வெளிவரும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வெடிப்பு சம்பவம் தலைநகரின் பாதுகாப்பு அமைப்புகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!