வைரல் வீடியோ... கண்ணீருடன் விடைபெற்ற தினேஷ் கார்த்திக்!
1985 ல் ஜூன் முதல் தேதியில் சென்னையில் பிறந்தவர் தினேஷ் கார்த்திக். இவர் தொடக்கத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தனர். தினேஷ் கார்த்திக் 2018ல் ரூ.7.40 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். தொடர்ந்து 4 ஆண்டுகள் கேகேஆர் அணிக்காக விளையாடி வந்தார். 2022 ம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 3 சீசன்களாக விளையாடி வந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 257 போட்டிகளில் விளையாடி 22 அரைசதங்கள் உட்பட மொத்தம் 4842 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 97* ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசன் தொடங்கும் போதே இது தான் தனது கடைசி ஐபிஎல் சீசன் என்று அறிவித்தார் தினேஷ் கார்த்திக்.
இந்த போட்டியில் தோல்வி அடைந்த ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. இது தினேஷ் கார்த்திக்கின் கடைசி ஐபிஎல் போட்டி என்பதால் அவர் கண்ணீர்மல்க ஓய்வு பெற்றார். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்கிற்கு ஆர்சிபி வீரர்கள் மரியாதை அளித்து வழியனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் விளையாடிய 15 போட்டிகளில் 13 இன்னிங்ஸ் விளையாடி 326 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்திருந்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!