undefined

 இந்திய கடற்படையின் புதிய தளபதியாக  தினேஷ்குமார் திரிபாதி  நியமனம்!

 

 இந்திய கடற்படையின் தற்போதைய தளபதி ஆர். ஹரிக்குமார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தற்போது கடற்படையின் துணை தளபதியாக உள்ள தினேஷ்குமார் திரிபாதி பணி மூப்பு அடிப்படையில் கப்பற்படை தளபதியாக நியமனம் செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  


வைஸ் அட்மிரலாக  கிருஷ்ண சுவாமிநாதன் அடுத்த துணை தளபதியாக நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.1964  மே 15ம் தேதி பிறந்த தினேஷ்குமார் திரிபாதி கப்பற்படையில் 1985ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இணைந்தார். சுமார் 30 ஆண்டு அனுபவம் வாய்ந்த தினேஷ் குமார் திரிபாதி கடற்படையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!