undefined

 மாவட்ட காங்கிரஸ் தலைவரை காணவில்லை... மகன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

 

 தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்  கேபிகே ஜெயக்குமார். இவர் நடைபெற்று முடிந்த  தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்தவர்.இந்நிலையில் ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என அவருடைய மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார்.


மே 2ம் தேதி இரவு  7.45 மணிக்கு வீட்டில் இருந்து ஜெயக்குமார் சென்றதாகவும், கடந்த 2 நாட்களாக இன்னும் அவர்  வீடு திரும்பவில்லை எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். அதில் காணாமல் போன தனது தந்தையை கண்டுபிடிக்க வேண்டும்.  கேபி ஜெயக்குமார் மகன் அளித்த புகாரின் பேரில் உவரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதற்கு முன்னதாக ஏப்ரல் 30ம் தேதி ஜெயக்குமார் தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டு கொண்டு இருந்தனர். அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்து எச்சரிக்கையுடன் இருந்தோம்.

ஆனால். தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அதற்காக  அவர்கள் வீட்டைச் சுற்றி சுற்றி வருவதாகவும் சிலரின் பெயர்களை மாவட்ட எஸ்.பி. க்கு புகார் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தான்   கேபிகே ஜெயக்குமாரை 2 நாட்களாக காணவில்லை என அவருடைய மகன் கருத்தையா   புகார் அளித்துள்ளார். இச்சம்பவம்  நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!