எடப்பாடி பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு... பெரும் பரபரப்பு! 

 
 

அதிமுக பொதுசெயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற திட்டத்துடன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம்  மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி  பேருந்து  நிலையம் அருகில்   பொதுமக்கள் மத்தியில் பேசி கொண்டிருந்தார். அப்போது, திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.  

கூட்டத்தின் நடுவே சென்ற தி.மு.க. நிர்வாகியின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடல்நிலை சரியில்லாத சிறுவனை, திமுக சேர்மனின் சகோதரர் காரில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

 கூட்டத்தை கலைக்கும் வகையில் திமுகவினர் இவ்வாறு செய்வதாக நினைத்த அதிமுகவினர், அந்த காரை அடித்து உடைத்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் ஏற்கனவே  திருச்சி  கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?