undefined

ப்ளீஸ்... மதிய உணவு ஆர்டர் பண்ணாதீங்க... zomato வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள்!

 

 இந்தியா முழுவதும் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது.இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஹீட் ஸ்ட்ரோக்கால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில்  கடுமையான வெப்பச் சலனம் நீடித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பலர் உயிரிழந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சில மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகி வெப்ப அலை  உடல்நலப்பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.


 குறிப்பாக பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் வெயிலுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். ஐஎம்டி இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை தொடரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.வெப்ப அலையால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  

 

இணைநோய் இருப்பவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதியம் உணவு ஆர்டர் செய்ய வேண்டாம் என ஆன்லைன் உணவு விநியோக தளமான Zomato வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில்  நிலவும் கடும் வெப்பம் மற்றும் வெப்ப அலையில் இருந்து தனது டெலிவரி கூட்டாளிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நிறுவனம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!