undefined

மீன் பிடிக்க போகாதீங்க... 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

 

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும்  நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று ஜூலை 17ம் தேதி  காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் திருச்சூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று  கேரளாவில் உள்ள 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழையோடு காற்றின் வேகம் மணிக்கு  50 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடும் என்பதால், கேரள மீனவர்கள் நாளை வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?