மிஸ் பண்ணாதீங்க... பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

 

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பெரும் திரளான பயணிகள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் சூழல் உருவாகும் என்பதால், ரயில்வே துறை முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதன் பகுதியாக, பொங்கல் சிறப்பு நாட்களைச் சுட்டிக் காட்டும் ரயில் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 16) காலை 8 மணி முதலாக தொடங்கியுள்ளது. இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்ய விரும்புவோர் IRCTC தளத்தைக் பயன்படுத்தலாம். அதே சமயம், நேரடியாக டிக்கெட் பெற விரும்புபவர்கள் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு கவுன்டர்களில் டிக்கெட்டுகளைப் பெறலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் அதிக நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் வாங்கிக் கொள்ளுமாறு ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!