திரௌபதி முர்மு ஒரு நாள் ஆசிரியராக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் !
இந்தியாவின் குடியரசு தலைவர் டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் ஆசிரியராக பணிபுரிந்தார். அங்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்கள் குறித்து திரௌபதி முர்மு கேட்டறிந்தார்.
மாணவர்களிடையே புவி வெப்பமடைதல் குறித்து கலந்துரையாடல் நிகழ்த்திய திரௌபதி முர்மு மாணவர்களுக்கு நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நம்மைச் சுற்றிலும் அதிக மரங்களை நட வேண்டும் என மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர் மாணவர்களுடன் கலந்துரையாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!