undefined

  நடிகர் விஜய்க்கு டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து!

 


 
இன்று ஜூன் 22ம் தேதி தவெக தலைவரும் இளையதளபதி நடிகரும் ஆன விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து அவருக்கு திரையுலக நண்பர்கள், தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதையொட்டி தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்த் திரையுலக முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி திரு. விஜய்க்கு  மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும்  விஜய்  பூரண உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!