அடுத்தடுத்து அதகளம் கிளப்பிய விஜய்... அதிகாலை பந்தக்கால் பூஜை... ‘தளபதி 69’ படப்பிடிப்பு துவக்கம்!
இன்று அதிகாலை 4.50 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ஒரே நாளில் நடிகர் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் ‘தளபதி69’ படத்தின் பூஜையும் நடந்து முடிந்துள்ளது. படபூஜையைத் தொடர்ந்து சம்பிரதாய படப்பிடிப்பு துவங்கியது.
ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இதில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.
இன்று காலை படத்தின் பூஜை நடைப்பெற்ற நிலையில், சில சம்பிரதாய காட்சிகளுடன் படப்பிடிப்பு துவங்கியது. நாளை முதல் முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெறும் என்கிற நிலையில், முதற்கட்டமாக பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயின் 'GOAT' படத்தில் இடம்பெற்ற ‘மட்ட...’ பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் சேகர் இந்தப் பாடலுக்கும் நடனம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!