6.9 ரிக்டரில் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பொதுமக்கள் பீதி!

 

 சமீபகாலமாக உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் போனின் தீவுகள் அல்லது ஒகாசவரா தீவுகள் அமைந்துள்ளன. இந்த 3 முக்கிய தீவுக்கூட்டங்கள் அடங்கிய  போனின் தீவுகளின் வடக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி இருப்பதாக  அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு மத்திய டோக்கியோ வரை உணரப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!