undefined

“இந்த சதியில் எடப்பாடியும் பார்ட்னர்” - அமைச்சர் ரகுபதி ஆவேசம்!

 

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தும் சிறப்பு கணக்கெடுப்பு (SIR) நடவடிக்கையை எதிர்த்து திமுக போராடிவருகின்ற நிலையில், அதனை ஆதரித்து அதிமுக நீதிமன்றம் சென்றுள்ளது குறித்துப் பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி, “தமிழர்களின் வாக்குரிமையை பறிக்கும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள சூழலில், போதுமான நேரமின்றி அவசரமாக SIR நடவடிக்கை மேற்கொள்வது சந்தேகம் தருவதாக திமுக தெரிவித்துள்ளது. இதைத் தடுக்க மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன், உச்ச நீதிமன்றத்திலும் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கு மாறாக, அதிமுக இந்த நடவடிக்கையை ஆதரித்து நீதிமன்றம் சென்றுள்ளது. இதைப் பற்றி பேசிய அமைச்சர் ரகுபதி, “பாஜகவுக்கும் SIR-ஐ ஆதரித்து வழக்கு தொடரத் தோன்றவில்லை. ஆனால் அதிமுக, பாஜகவின் கிளைக் கழகமாக நடந்து நீதிமன்றம் வரை சென்று உள்ளது” என குற்றஞ்சாட்டினார். மேலும், “வாக்குரிமையைப் பறிக்கும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் இணைந்து செயல் படுகிறார். தமிழ்நாட்டை டெல்லியின் அடிமையாக்க முயற்சி இது” என்றார்.

SIR நடவடிக்கையால் வாக்காளர் பட்டியலில் தவறான நீக்கங்கள் ஏற்பட்டு வாக்குரிமை பாதிக்கப்படலாம் என திமுக வலியுறுத்துகிறது. இதை எதிர்த்து தொடரப்படும் போராட்டம் தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு அதிமுக தரப்பில் உடனடி பதில் வெளியாகவில்லை. தேர்தலை முன்னிட்டு இந்த விவகாரம் அரசியல் ரீதியில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!