இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி... அமித் ஷாவுடன் சந்திப்பு!
டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர். அதிமுகவுக்குள்ளேயே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். கூட்டணி கலகலத்துப் போயிருக்கிறது. செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவையும், நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசியிருந்த நிலையில் இன்று செப்டம்பர் 16ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.
பாஜக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து கட்சிகளும், தலைவர்களும் வெளியேறி வருவது டெல்லி மேலிடத்தை அதிருப்திக்குள்ளாக்கி வருகிறது.பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில், அடுத்த சில நாட்களிலேயே டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறினார். எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடு கொடுத்து அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அதற்கெல்லாம் வளைந்து கொடுக்காமல் செங்கோட்டையனை கட்சியில் இருந்து எடப்பாடி நீக்கிய நிலையில், டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை உருவாக்கினார் செங்கோட்டையன்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அவரது திடீர் டெல்லி பயணம் காரணமாகவும், அவர் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!