தேர்தல் பகை.. அதிமுக நிர்வாகிகளை வீடு புகுந்து தாக்கிய திமுக நிர்வாகிகள்!
திண்டுக்கல்லை அடுத்த அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் நடந்த தேர்தல் கெடுபிடியால், அதிமுகவைச் சேர்ந்த சித்த ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை, அகரம் பேரூராட்சி திமுக தலைவர் நந்தகோபால், திமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து வீடு புகுந்து தாக்கியுள்ளார். இதில் வீட்டில் இருந்த பெண்களையும் தாக்கியுள்ளனர்.
மூன்று பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து திமுக பிரமுகர் நந்தகோபாலை முற்றுகையிட்டு சரமாரி கேள்விகளை எழுப்பினர். இதில், பயந்துபோன திமுக பிரமுகர் நந்தகோபால் தப்பித்தால் போதும் என நினைத்து தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு திமுக நிர்வாகிகளை வரவழைத்து காரில் ஏறி தப்பி ஓடினார்.
கிராம மக்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து, 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் கெடுபிடியால் அதிமுகவினர் மீது திமுகவினர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!