தகுதியுள்ள மகளிர் உரிமைத் தொகை... முதல்வர் ஸ்டாலின் உறுதி!
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விஜயம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (நவம்பர் 10) ரூ. 767 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை பற்றி விளக்கி, புதுக்கோட்டைக்கு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசிய ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையில் இதை அறிவித்தபோது பலர் சாத்தியமில்லை என்றார்கள். ஆனால், நிதி நெருக்கடியை சமாளித்தவுடன், நாங்கள் திட்டத்தை நிறைவேற்றினோம். இதுவரை 27 மாதங்களில் 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். இது உதவித்தொகை அல்ல — உரிமைத்தொகை,” என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது, “யாருக்கெல்லாம் இந்த ஆயிரம் ரூபாய் தேவையோ, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும். தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்துக்கு துணையாக இருக்கும் இந்தத் திட்டம், திராவிட மாடல் 2.0 அரசிலும் தொடரும். சமூக முன்னேற்றம், பின்தங்கியோரின் வளர்ச்சி, எளிய மக்களின் நலன் ஆகியவற்றுக்காக ஏராளமான திட்டங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்,” என்றார் ஸ்டாலின்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க