இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள் ... தாய்லாந்து – கம்போடியா வெடித்த மோதல்!
தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் இருநாடுகள் இடையேயான மோதல் வலுவடைந்து போராக மாறி உள்ளது.
இந்நிலையில், இந்த மோதல்கள் காரணமாக, உபோன் ரட்சதானி, சூரின், சிகாகெட், புரிராம், சகேயோ, சந்தபுரி, புராட் மாகாணங்களில் உள்ள 20 இடங்களுக்கு, இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என தாய்லாந்தில் உள்ள இந்திய துாதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இந்தியர்களுக்காக 085592881676 என்ற அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!