undefined

இபிஎஸ் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் திடீர் ரத்து...   வெடித்த செங்கோட்டையன் விவகாரம் . !  

 


அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் கடந்த சில நாட்களாக பொதுச்செயலாளர் எடப்பாடி மீது அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  இன்று செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். 

எடப்பாடிக்கும் அவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை குறித்து இன்று பேச இருக்கிறார். அவர் என்ன பேசப்போகிறார் கட்சியிலிருந்து விலகுகிறாரோ அல்லது வேறு ஏதேனும் புதிய திட்டம் வைத்திருக்கிறாரா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.  


இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  அதன்படி இன்று தேனியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.   ஒரு புறம் செங்கோட்டையன் பேட்டி கொடுக்க இருக்க தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய ஆலோசனை கூட்டம் ரத்து  செய்யப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?