undefined

என் தலையை வெட்டினாலும் நான் வங்கமொழியில் தான் பேசுவேன்... மம்தா பானர்ஜி சட்டப்பேரவையில் ஆவேசம்!

 


 
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில  சட்டமன்றத்தில் நடந்த ஒரு சிறப்பு அமர்வில் உரையாற்றினார். அந்த உரையில்   வங்கமொழி பேசும் மக்களுக்கு எதிராக மொழி தீவிரவாதத்தில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும்,  இது வங்காள மக்களுக்கு எதிரான செயல் என்றும் குற்றம்சாட்டினார். “வங்கமொழி பேசும் மக்களுக்கு எதிராக மொழித் தீவிரவாதத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது. இங்கே ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலை உங்களுக்கு வரும். வங்காள மக்களுக்கு எதிராக மொழி தீவிரவாதம் செய்யும் எந்த கட்சியும் வங்காளத்தில் வெற்றி பெற முடியாது,” எனக் கூறியுள்ளார்.  


மம்தா, பாஜக ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக துன்புறுத்தல்கள் நடப்பதாகவும், இது ஒரு வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். “பாஜக ஒரு வாக்கு-திருட்டு கட்சி, ஊழலில் மூழ்கியவர்கள், வங்காளிகளை துன்புறுத்துபவர்கள், மற்றும் மோசடியில் முதலிடம் வகிப்பவர்கள். பாஜக ஒரு தேசிய அவமானம், நான் அவர்களை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன். பாராளுமன்றத்தில் எங்கள் எம்பிக்களை CISF-ஐ பயன்படுத்தி பாஜக துன்புறுத்தியது. இங்கு வங்காளத்தில் எங்கள் குரலை அடக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். என் தலையை வெட்டினாலும், நான் வங்கமொழியில் பேசுவேன்,” என ஆத்திரத்தில் பேசினார்.  


 மேலும், பாஜகவை மக்களுக்கு எதிரான கட்சியாகவும், ஏழைகளுக்கும் இந்துக்களுக்கும் எதிரானவர்களாகவும் விமர்சித்தார். “பாஜக மக்களுக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிரானது, இந்துக்களுக்கு எதிரானது. வங்காள மக்கள் இதை உணர்ந்து, பாஜகவை தோற்கடிப்பார்கள்,”   முர்ஷிதாபாத் கலவரங்களை “மாநில அரசு ஆதரவுடன் நடந்தவை” என்று பாஜக குற்றம்சாட்டியதை மறுத்து, மத்திய அரசு மற்றும் பிஎஸ்எஃப்-ஐ வங்காளத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு உடந்தையாக இருந்ததாக கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?