எலெக்ஷன் வருவதால் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுமா?
தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் காரணமாக பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் "செமஸ்டர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும் பல்கலைக்கழகங்களால் கல்லூரிகள் தொடங்குவதற்கு முன்பே வரையறுக்கப்பட்டு விடுகின்றன. இதனை தேர்தல் ஆணையம் நன்கு அறியும்.
எனவே, தேர்தல் ஆணையம் விடுமுறை காலங்களில்தான் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார். "தேர்தலுக்காகப் பல்கலைக்கழகத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு இல்லை" என உறுதிபடக் கூறியுள்ளார். இருப்பினும், பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!