கோவில் திருவிழாவில் பாரம்பரிய நடனமாடி மாஜி அமைச்சர் உற்சாகம்.. வீடியோ வைரல்!
கோயம்புத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள பழம்பெருமை வாய்ந்த சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை அலுவலக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, நல்லாராம் அறக்கட்டளை தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.பி.அன்பரசன், சகோதரர் செந்தில்குமார் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும் திருமதி வித்தியாதேவி வேலுமணி தனது மகளுடன் குத்துவிளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சந்தனம், குங்குமம், பூக்கள் தூவி பக்திப் பரவசத்துடன் திருவிளக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
அதன்பின், கோவில் நிர்வாகம் சார்பில் வட்டம் அமைத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எஸ்.பி.அன்பரசன், சகோதரர் செந்தில்குமார் ஆகியோருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பக்தர்களுடன் கலந்து கொண்டு ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவருடன் பொதுமக்கள் விசில் அடித்தும், நடனமாடியும் ஆரவாரம் செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!