ஏவுகணைத் தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்றத் தலைவர் பலி!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரி பருபி பலியானார். இவருக்கு வயது 54. ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளைக் கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் உக்ரைன் நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டார்; மேலும், சுமார் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் மீது தாக்குதல் நடத்தியவர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ரஷியா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போரை நிறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!