சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மூன்று ஆண்டு எல்எல்பி சட்டப்படிப்புகளுக்கு 2530 இடங்கள் மாணவர் சேர்க்கை நடைபெறும். இவை நடப்பு கல்வியாண்டு இணைய வழி கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பிறப்பித்துள்ளது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இரண்டு ஆண்டு LLM படிப்புக்கு ஆகஸ்ட் 5ம் தேதி வரையும், மூன்று ஆண்டு முதுகலை படிப்புக்கு ஆகஸ்ட் 10ம் தேதி வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலமாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!