undefined

தனிமையில் இருந்த காதலர்கள்... செல்போனில் படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த அதிகாரி... விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மலைராமர் கோவில் பகுதியில் காதல் ஜோடி தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதை கவனித்த இருவர் காதல் ஜோடியை செல்போனில் படம் பிடித்து அவர்களிடம் காட்டி இருவரும் வனத்துறை அதிகாரிகள் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது அவர்கள் கையில் 500 ரூபாயை கொடுத்து படத்தை அழிக்குமாறு அவர்களிடம் கெஞ்சினர்.

மேலும், அவர்களை மிரட்டி 3000 ரூபாய் வாங்கியுள்ளனர். இந்நிலையில், அந்த  காதல் ஜோடி ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்ட இருவரிடமும் விசாரணை நடத்தினர். ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றொருவரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர்.

விசாரணையில், ஒருவர் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த தங்கசாமி (34) என்பதும், தலைமறைவானவர் கீழப்பாவூரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட தங்கசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!