undefined

பகீர்... மனைவி தலையைத் துண்டித்து கொலை... துணை ராணுவ வீரர் வெறிச்செயல்!!

 

ஏரல் அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியை தலை துண்டித்துக் கொடூர கொலை செய்த துணை ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து மகன், மகள் உள்ளனர்.

மனைவியின் நடத்தையில் தமிழ்ச்செல்வன் சந்தேகமடைந்தார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வன் தூங்கி கொண்டிருந்த மனைவி உமா மகேஸ்வரியின் தலையை அரிவாளால் துண்டித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த ஏரல் காவல் நிலைய போலீசார் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து தமிழ்ச் செல்வனைத் தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?