undefined

புஸ்ஸி ஆனந்திடம் காலில் விழுந்து ஆசி..  தவெக-வில் இணைந்தார்  தாடி பாலாஜி!

 

தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளாக தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அவரது ரசிகர்கள் பல கல்வி சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தபோது தான், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் தனது தமிழக வெற்றிக் கழகத்தை அறிவித்தார். அக்கட்சியின் கொடி மற்றும் பாடல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் த.வெ.க வின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய்க்கு நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் என பலரும் தொடர்ந்து வரவேற்பு அளித்து வருகின்றனர், தளபதி விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் தாடி பாலாஜி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்று தாடி பாலாஜி கட்சியில் இணைந்தார். மேலும் பல நடிகர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!