பிரபல உதவி இயக்குநர் காலமானார்.... படப்பிடிப்பில் பெரும் சோகம்!
கொரோனா காலகட்டத்திற்கு திடீர் இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஹாலிவுட் உதவி இயக்குனர் டியோகோ பொரெல்லா படப்பிடிப்பு தளத்தில் காலமானார். இவருக்கு வயது 47. இவர் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் எமிலி இன் பாரிஸ் என்ற வெப் தொடரின் ஐந்தாவது சீசனுக்கு டியோகோ பொரெல்லா உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்தத் தொடரின் படப்பிடிப்பு இத்தாலியின் வெனிஸில் நடைபெற்று வந்தது. கடந்த வியாழக்கிழமை நடந்த படப்பிடிப்பின்போது மாலை 7 மணிக்கு டியோகோ மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனடியாக படப்பிடிப்பில் இருந்த மருத்துவ ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
படப்பிடிப்பின்போது உதவி இயக்குனர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எமிலி இன் பாரிஸ் சீசன் 5 டிசம்பர் 18 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகஇருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!