பிரபல எம்.எல்.ஏ. மேடையில் மயங்கி சரிந்து மரணம்... தொண்டர்கள் அதிர்ச்சி!
Aug 22, 2025, 12:20 IST
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் வசித்து வருபவர் எம்.எல்.ஏ வாலூர் சோமன். இவர் பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. இவர் நேற்று மாலை பீர்மேடு பகுதியில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது மேடையிலேயே திடீரென அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ. வாலூர் சோமன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!