குஷியில் ரசிகர்கள்... அபுதாபியில் ஐபிஎல் மினி ஏலம்.. எப்போது தெரியுமா?
வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளும் வெளிநாட்டில் நடைபெற்ற ஐபிஎல் ஏலங்களில், 2023ல் துபை, 2024ல் சவுதி அரேபியாவின் ஜெட்டா மேடையாக இருந்தது.
இம்முறை மினி ஏலத்திற்கு அபுதாபி தேர்வாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில், டிசம்பர் 15 அல்லது 16ம் தேதிகளில் ஏலம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற்றதை தொடர்ந்து, இம்முறை மினி ஏலம் மட்டுமே நடத்தப்பட உள்ளது. அணிகள் தங்களின் அணிக்கட்டமைப்பை மேம்படுத்த முக்கிய வீரர்களைத் தேர்வு செய்யவுள்ளதால், ஏலத்தை சுற்றி கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் ஏலம் எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது என்பது தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் விவகாரமாக உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க