கரூரில் பயங்கர தீ விபத்து... 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசம்!
கரூர் மாவட்டத்தில் பேருந்துகளுக்கு கூடு கட்டும் இடத்தில் நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்படிருந்த 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயில் எரிந்து நாசமானது.
தமிழகம் முழுவதும் பேருந்துகளுக்கும், லாரிகளுக்கு பாடி கட்டும் இடமாக புகழ் பெற்ற கரூரில் சின்னமநாயகன்பட்டியில் பாடி கட்டும் இடத்தில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 23 பேருந்துகள் எரிந்து கருகியது. மொத்தம் 50 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ பரவியதையடுத்து தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு பேருந்தின் அடிபாகத்தின் விலை மட்டும் ரூ.20 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்கு பாடி கட்ட ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆக ஒரு முழு பேருந்து ரூ.40 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தால் உரிமையாளர்களுக்கு பல லட்சம் வரை செலவை இழுத்துவிட்டு இருக்கும். ஆனால் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பழைய பேருந்துகள் என்பதால் நஷ்டம் குறைவாகவே ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
பழைய பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களில் தீயணைப்பு கருவிகள் இருந்திருந்தால் இந்த அளவுக்கு விபத்து ஏற்பட்டிருக்காது என்று சொல்லப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!