நின்றுக் கொண்டிருந்த லாரியில் திடீர் தீ விபத்து... தூத்துக்குடியில் பரபரப்பு!

 

தூத்துக்குடியில் வீல் அலைன்மென்ட் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில், மதுரை பைபாஸ் ரோடு, இசக்கி வீல் அலைன்மென்ட் கடை முன்பு நிறுத்தியிருந்த லாரியில் திடீரென தீப்பிடித்தது. அருகில் இருந்தவர்கள் சிப்காட்  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் உதவி மாவட்ட அலுவலர் இ.ராஜு தலைமையில் சிப்காட் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் மற்றும் ஊர்தி குழுவினர்கள் உடனடியாக ஸ்தலம் வந்து விரைவாக செயல்பட்டு லாரியில் பிடித்த  தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!