சென்னை வந்த விமானத்தில் தீ... பெரும் பரபரப்பு!
சென்னை விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் 4வது இன்ஜினில் தீ பிடித்தது. தீ பிடித்த போதும் விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார். விமானம் தரையிறங்கியதும் உடனடியாக இழுவை வாகனங்கள் மூலம் விமான நிறுத்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, விமானத்தில் பற்றிய தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. உரிய நேரத்தில் விமானத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது.
நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடுமையான காற்றழுத்தம் நிலவியது. இதனால், விமானத்தை சென்னைக்கு திருப்புவதாக விமானி அறிவித்தார்.சுமார் 2 மணி நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், விமானம் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டு தரையிறக்க முற்பட்ட போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிறகு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி, பிறகு 2வது முயற்சியில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். இந்நிகழ்வு சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று சரக்கு விமானத்தில் தீப்பிடித்த சம்பவம் பயணிகள் மத்தியில் அடுத்தடுத்து அதிர்ச்சியையும், பரபரப்பையும் அளிப்பதாக அமைந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!