மலர்வளையம் வைத்து முக்காணி பாலத்திற்கு முதலாமாண்டு நினைவஞ்சலி... பாஜகவினர் 54பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சாலையில் ஏரல் அருகே முக்காணி தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த உயர்மட்ட பாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பழுதடைந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாதபடி நிலையில் உள்ளது. இந்த பாலம் பழுதடைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து முக்காணி ஆற்றுபாலத்திற்கு மலர் வளையம் வைத்து முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அக்கட்சியினர் பாலத்திற்கு மலர் வளையம் வைக்க முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார் - மற்றும் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 54பேரை ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் கைது செய்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாஜக போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!