நாளை மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை... தயார் நிலையில் ஜிஎஸ்எல்வி எஃப் 16 ராக்கெட் !
Jul 29, 2025, 07:45 IST
நாளை ஜூலை 30ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதள மையம் அமைந்துள்ளது.
இந்த மையத்திலிருந்து நாளை ஜூலை 30ம் தேதி ஜிஎஸ்எல்வி எஃப் 16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதனால் பழவேற்காடு மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக திருவள்ளூா் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!