மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம்... விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை!
தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். தினமும் காலை 5 மணிக்கு கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு இரவு 10 மணிக்குள் திரும்புவார்கள். இந்நிலையில் நேற்றிரவு கரையில் நிறுத்தியிருந்த ஒரு விசைப் படகில் ஏறி 4பேர் கொண்ட கும்பல் மது போதையில் மீனவர்களிடம் தகராறு செய்து உள்ளனர்.
இதில் 2பேர் காயம் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் மீனவர்களை தாக்கிய 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசைப் படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!