நாடு முழுவதும் நாளை முதல் காலணிகளின் விலை உயர்கிறது.. புதிய BIS தரநிர்ணய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
Jul 31, 2024, 06:18 IST
நாளை முதல் நாடு முழுவதும் காலணிகளின் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் உட்பட பல்வேறு பொருட்களின் விலை பரிசீலிக்கப்பட்டு முதல் தேதியில் மாற்றி அமைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் சந்தைகளில் விற்கப்படும் காலணிகளுக்கு புதிய தர நிர்ணய வழிகாட்டு நெறிமுறைகளை BIS வெளியிட்டு வருகிறது.
அதன்படி, IS 6721 & IS 10702 வழிகாட்டுதல்கள் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதால் காலணிகளின் விலையும் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. BIS ன் இந்த தர வழிகாட்டுதல்களை கடைபிடிக்க காலணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக செலவு ஏற்படும்.
எனவே நாளை ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் காலணிகளின் விலை உயர்கிறது. ரூ.50 கோடிக்கு கீழ் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்து வகையான காலணிகள், ஷூக்கள் போன்றவைகளின் விலை கணிசமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!