undefined

16 வயது மாணவிக்கு கட்டாய திருமணம்.. பெற்றோருக்கு வலைவீச்சு!

 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி நாட்டார் தெருவைச் சேர்ந்தவர் தவசிமுத்து மகன் உதயகுமார் (22). கல்லூரி மாணவரான இவர் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலிப்பது சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்ததும், அந்த பெண்ணுக்கு வேறு இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் ரஞ்சித் (24) என்ற வாலிபருக்கும் மயிலாடுதுறை அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த மே 26ம் தேதி சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்தை விரும்பாத அந்த பெண், காதலன் உதயகுமாரின் செல்போனில் அழைத்து, தன்னை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 9ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் உதயகுமார் இருசக்கர வாகனத்தில் சென்று மயிலாடுதுறை அருகே வீட்டில் இருந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலக சமூக சேவகர் ஆரோக்கியராஜ், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரஞ்சித், உதயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இந்த வழக்கு தொடர்பாக, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, ரஞ்சித்தின் தந்தை கொளஞ்சி, தாய் செல்வி, சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெண்ணின் தாய், தந்தை ஆகியோரை தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!