மேகாலயாவின் முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் காலமானார்!
மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று செப்டம்பர் 12ம் தேதி வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 93. லபாங் நீண்ட காலமாக வயது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவர், காலமானபோது முன்னாள் எம்.பி.யும் காங்கிரஸ் தலைவருமான வின்சென்ட் எச். பாலா மருத்துவமனையில் உடன் இருந்தார். மறைந்த முன்னாள் முதல்வருக்கு திங்கள்கிழமை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
1972ம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்று சட்டப்பேரவையில் நுழைந்தார். இதனையடுத்து 4 முறை வடகிழக்கு மாநிலத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரராக இருந்த டி.டி. லபாங், பின்னர் 2018ம் ஆண்டு தேசிய மக்கள் கட்சியில் இணைந்தார் .
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!