undefined

நடிகையிடம் திருமணம் செய்துக் கொள்ள புரொபோஸ் செய்த 17 வயது சிறுவன்!

 

17 வயது மாணவன் ஒருவன், பிரபல மலையாள திரைப்பட நடிகை அவந்திகா மோகனிடம், என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க’ என்று புரோபோஸ் செய்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனங்களைக் குவித்து விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. 

சமூக வலைத்தளங்களில் பிரபலங்களிடம் ரசிகர்கள் சிலர் அத்துமீறலில் ஈடுபடுவது உண்டு. தொடர்ந்து கமெண்ட் செய்து சங்கடத்திற்கு உள்ளாக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் விதத்தில், சமீபத்தில் பிரபல மலையாள திரைப்பட நடிகை அவந்திகா மோகனுக்கு இப்படிப்பட்ட புரொபோசல் வந்திருக்கிறது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக 17 வயது மாணவர் ஒருவர் இப்படி திருமணம் செய்துக் கொள்ள கோரிக்கை வைத்திருக்கிறார். 

தற்போது நடிகை அவந்திகா அதற்கு பதிலளித்திருக்கிறார். அதில், ''சிறிது காலமாக எனக்கு செய்தி அனுப்பி வரும் ஒரு இளம் ரசிகரிடம் நான் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு 16 அல்லது 17 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்க்கை என்றால் என்னவென்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

ஒரு வருடமாக இப்படி மெசேஜ் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் இன்னும் ஒரு குழந்தை தான். படிப்பை பற்றி சிந்திக்க வேண்டிய வயதில் நீங்கள் இருக்கிறீர்கள். நான் உன்னை விட வயதில் ரொம்ப மூத்தவர். நாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாரும் என்னை உன் மனைவியா நினைக்க மாட்டாங்க, உன் அம்மான்னு நினைப்பாங்க. சரியான நேரம் வரும் போது, உன் வாழ்க்கையிலும் ஒரு காதல் கதை தொடங்கும்’’ என்று கூறியிருக்கிறார். நடிகை அவந்திகா கடந்த 2017ல் அனில் குமார் என்பவரை மணந்துள்ள நிலையில், அவர்களுக்கு ருத்ரான்ஷ் என்ற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?