undefined

காதலனைத் தேடி கள்ளப்படகில் தமிழகம் வந்திறங்கிய இளம்பெண்!

 

தன்னுடைய காதலனைத் தேடி இலங்கையில் இருந்து கள்ளப்படகில் தமிழகம் வந்திறங்கி இருக்கிறார் விஷுர்ஷியா எனும் இளம்பெண் ஒருவர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இளம்பெண் ஒருவர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் இலங்கை மன்னர் ஆண்டகுளம் பகுதியைச் சேர்ந்த 25 வயது விதுர்ஷியா என்பது தெரிய வந்தது. 

இவர் தனது தாய் தந்தையுடன் பழனியில் இருக்கும் அகதிகள் முகாமில் வசித்து வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு இளைஞருடன் காதல்  மலர்ந்தது. அதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு சென்ற விதுர்ஷியாவுக்கு மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வருவதற்கு விசா கிடைக்கவில்லை.

இதனால் தனது காதலனை கரம் பிடிக்க விதுர்ஷியா கள்ளப்படகில் இந்தியாவிற்கு வர முடிவு செய்தார். இதற்காக தனது நகைகளை விற்று ரூ.2 லட்சம் பணத்தை திரட்டி கள்ளப்படகில் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். அவரை போலீசார் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?