undefined

 சொகுசுக்காரில்  ஆடு திருடும் மர்மநபர்கள்... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 

 நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதில் சொகுசுக்காரில் வந்து ஆடுகளை நூதனமாக பிடித்து செல்லும் கும்பல் பிடிபட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கை நல்லூரில் வசித்து வரும்  சண்முகபாண்டியன் வீட்டில் கட்டி வைத்திருந்த விலை உயர்ந்த ஆடுகள்  திருடப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில்  போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.


இதில் தெற்கு பொய்கைநல்லூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலையில் சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள், சண்முகபாண்டியன் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் காரை நிறுத்தினர்.  அதில் இருந்து இறங்கிய 3மர்ம நபர்களில் ஒருவர், யாரும் இல்ல… சீக்கிரம் வாங்க வாங்க… என அழைக்க வீட்டிற்குள்ளே சென்று 3 ஆடுகளை அவிழ்த்து தூக்கிக் கொண்டு சீக்கிரம் ஏத்து.. சீக்கிரம் ஏத்து என காரில் ஏற்றி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது . காரின்  பதிவெண்களை வைத்து  மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள்  வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!