undefined

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 

இந்த வாரத்தின் துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி இருந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 

கடந்த மாதம் 23ம் தேதி தங்கம் விலை முதன்முறையாக சவரன் ரூ.75,040க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்ட நிலையில், அதன் பின்னரும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

நேற்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20ம், சவரனுக்கு ரூ.160ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,200க்கும் விற்பனை ஆன நிலையில், இன்று மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.75,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரு கிராமிற்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,470க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?