தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 சரிவு... இல்லத்தரசிகள் ஹாப்பி!
தமிழகத்தில் சென்னையில் இன்று காலை நேர விலை நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் 7,030 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.56,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்தாலும் அதிகளவில் வித்தியாசமில்லாமல் 10 ரூபாய்க்குள் குறைவதும் பின் மீண்டும் தடாலடியாக உயர்வதுமாக சவரன் ரூ.56,000யைக் கடந்து ரூ.60,000 நெருங்கி வருகிறது.
விரைவில் தங்கம் விலை நிச்சயம் ஒரு சவரன் ரூ.1லட்சத்தை நெருங்கி விடும் என்று பயமுறுத்துகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டியது.
இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகளிலும் பதற்றமும், சரிவுமாக தொடர்கிறது. இதனால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது குவிந்துள்ளதாலும் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.56,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!