undefined

அதிர்ச்சி...  ரூ78000 ஐ கடந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை ! 

 
 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 27ம் தேதி  ஒரு சவரன் மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 29-ந் தேதி ரூ.76000ஐ கடந்தது.  அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்து கொண்டே வருகிறது. 

அந்த வகையில் நேற்றும் விலை அதிகரித்திருந்தது. நேற்றைய நிலவரப்படி  கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ9725க்கும்,  சவரனுக்கு ரூ.160ம் உயர்ந்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும்  அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.  

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று  கிராமுக்கு ரூ80 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9805க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.78,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.137-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ1,37,000க்கும் விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?