கடலில் வீசப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள தங்கம்.. அசத்தலாக அத்தனையையும் மீட்ட ஸ்கூபா டைவிங் வீரர்கள்!

 

கேஜிஎஃப் பட பாணியில், கடலுக்குள் வீசப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள தங்கத்தை, கடலுக்குள் குதித்து ஸ்கூப்பா டைவிங் வீரர்கள் மீட்டனர். தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதியில் இருந்த ரூ.20.2 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை இரண்டு மீன்பிடி படகுகளில் கொண்டு வந்துள்ளனர். இவற்றை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தனுஷ்கோடி கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை, கஞ்சா, சமையல் மஞ்சள், வலி நிவாரணி, பீடி இலை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

கடலோர காவல் படையினரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றதுடன் கடலுக்குள் பார்சல்களை வீசியுள்ளனர். அவர்களை கடலோரக் காவல் படையினர் கடலிலேயே விரட்டிப் பிடித்தனர். படகில் இருந்த வேதாளையை சேர்ந்த இருவர் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஒருவர் என மூவரையும் மண்டபம் முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து சுமார் 20.2 கோடி ரூபாய் மதிப்பிலான 32.689 கிலோ தங்கத்தை கைப்பற்ற இந்திய கடலோர காவல்படையினர், டிஆர்ஐ அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினருடன் இணைந்து சிறப்பு நடவடிக்கையை எவ்வாறு மேற்கொண்டனர் என்பது குறித்த வீடியோவை ஏஎன்ஐ பகிர்ந்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்