அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து... 5 பேர் பலி; 10 பேர் படுகாயம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்தில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் இருந்து நேற்று அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து காகோரி என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!