பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து.. 46 பயணிகள் உயிர் தப்பினர்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை அருகே அரசுப் பேருந்து சாலையோர ஓடைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து ராமேசுவரத்துக்கு நாள்தோறும் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. கழுகுமலைக்கு காலை 8 மணிக்கு வரும் இப்பேருந்தில், பள்ளி, கல்லூரி மாணவர்- மாணவியர் அதிக எண்ணிக்கையில் செல்வது வழக்கம். நேற்று காலை இப்பேருந்து வழக்கம்போல கழுகுமலைக்கு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம், மேலசெல்லூரைச் சேர்ந்த செல்வதுரை (37) ஓட்டுநராகவும், கொத்தங்குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை(58) நடத்துநராகவும் இருந்தனர்.
கழுகுமலையிலிருந்து புறப்பட்டு கெச்சிலாபுரம் பகுதியில் சென்றபோது, திடீரென பேருந்தின் முன்பக்க-பின்பக்க சக்கரங்களை இணைக்கும் அச்சு உடைந்தது. இதனால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர ஓடைக்குள் பாய்ந்தது. பேருந்திலிருந்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவல் அறிந்து கழுகுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேருந்துக்குள் சிக்கியிருந்தோரை மீட்டு, மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைத்தனர். மேலும் ஓட்டுநர் செல்வதுரையிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!